×

குருப்பெயர்ச்சியை ஒட்டி, திட்டை மங்கள குருபகவானுக்கு சிறப்பு பூஜை

குருபெயர்ச்சியை ஒட்டி, தஞ்சையில் அமைந்துள்ள குரு பரிகாரத் தலமான திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் மங்கள குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு நேற்று இரவு 9.48 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி, குரு பரிகாரத் தலமான தஞ்சாவூர் மாவட்டம்திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள மங்கள குருபகவானுக்கு, சிறப்பு யாக பூஜைகள் செய்யப்பட்டு, கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து,குருபகவானுக்கு மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு,
 

குருபெயர்ச்சியை ஒட்டி, தஞ்சையில் அமைந்துள்ள குரு பரிகாரத் தலமான திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் மங்கள குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு நேற்று இரவு 9.48 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி, குரு பரிகாரத் தலமான தஞ்சாவூர் மாவட்டம்திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள மங்கள குருபகவானுக்கு, சிறப்பு யாக பூஜைகள் செய்யப்பட்டு, கடம் புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து,குருபகவானுக்கு மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. கொரோனா காரணமாக இந்த பூஜையில் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பின்னர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குருபகவானை வழிபட்டு சென்றனர்.

இதனிடையே, குரு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் பரிகாரம் செய்வதற்காக கோயிலில் வரும் 26 ஆம் தேதி லட்சார்ச்சனை பூஜைகளும், 27 முதல் 30 ஆம் தேதி வரை பரிகார பூஜைகளும் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் நேரடியாக பங்கேற்கலாம் என்றும், வர இயலாதவர்கள் வங்கி அல்லது அஞ்சலகம் மூலம் பணம் செலுத்தி பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.