×

தமிழகத்தில் 3 நாட்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நேற்று ஒரேநாளில் 1,901 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 39ஆயிரத்து 277 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 30பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன் நேற்று 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்த நிலையில் கொரோனா தடுப்பூசி
 

தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நேற்று ஒரேநாளில் 1,901 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 39ஆயிரத்து 277 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 30பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன் நேற்று 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசி திட்டம் கோவையில் இன்று தொடங்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்துக்கு மேலும் 10 கோடி தடுப்பூசிகள் தமிழகத்திற்கு தேவைப்படுகிறது. இலவசமாக போடப்படும் தடுப்பூசிகளையே பொதுமக்கள் அதிகம் விரும்புகின்றனர். சிஎஸ்ஐஆர் பங்களிப்புடன் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கொரோனா தட்டுப்பாடு என்பது இன்னும் 3 நாட்களுக்கு இருக்காது. தமிழகத்துக்கு 5,42,280 கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி இன்று மாலை வரவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.