×

‘8 மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை’ – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமாக 491 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையிலும், நவ.30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அனுமதி அளிக்கப்படாமல் இருந்த புறநகர் ரயில் சேவை, தியேட்டர்கள், பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது. சுற்றுலாத் தலங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே தடை தொடருவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த மாதம் அளிக்கப்பட்ட தளர்வுகள் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி
 

தமிழகத்தில் மொத்தமாக 491 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையிலும், நவ.30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அனுமதி அளிக்கப்படாமல் இருந்த புறநகர் ரயில் சேவை, தியேட்டர்கள், பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது. சுற்றுலாத் தலங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே தடை தொடருவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த மாதம் அளிக்கப்பட்ட தளர்வுகள் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் 491 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 113 பகுதிகளும், சென்னையில் 4 கட்டுப்பாட்டு பகுதிகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் திண்டுக்கல், ஈரோடு, பெரம்பலூர், சிவகங்கை, தஞ்சை, தூத்துக்குடி, விழுப்புரம், வேலூர் ஆகிய 8 மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை என்றும் தெரிவித்துள்ளது.