×

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற வியாபாரி வீட்டில் திருட்டு!

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்தவரின் வீட்டில் திருட்டுப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் இன்று மேலும் 154 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 4, 359 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அம்மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 உயர்ந்துள்ளது. இந்நிலையில் வேலூர் சலவன்பேட்டை திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்த கடலை மிட்டாய் வியாபாரம் செய்யும் ரத்தனகிரி(45)-அன்னமேரி(40) தம்பதியினர் கடந்த 15-ம் தேதி கொரோனா
 

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்தவரின் வீட்டில் திருட்டுப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் இன்று மேலும் 154 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 4, 359 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அம்மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 உயர்ந்துள்ளது.

இந்நிலையில் வேலூர் சலவன்பேட்டை திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்த கடலை மிட்டாய் வியாபாரம் செய்யும் ரத்தனகிரி(45)-அன்னமேரி(40) தம்பதியினர் கடந்த 15-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூர் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களது பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் தங்க நகை அடையாளம் தெரியாத நபர்களால் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வேலூர் தெற்கு காவல் துறை விசாரணை நடத்திவருகின்றனர்.