×

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் காவல்நிலையத்திலேயே மரணம்

மதுரை அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் காவல்நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரது மகன் அய்யனார். இவர் கொத்தனாராக பணிபுரிந்துவருகிறார். வாரம் முழுவதும் பணி செய்துவிட்டு ஞாயிற்றுகிழமைகளில் அய்யனார் நண்பர்களோடு மது அருந்துவது வழக்கம். அதனைபோன்றே நேற்று இரவு டி.கல்லுபட்டி பேருந்து நிலையம் அருகே தனது நண்பர்களுடன் அய்யனார் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அய்யனாருக்கும் அவரது நண்பர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரோந்துபணியில்
 

மதுரை அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் காவல்நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரது மகன் அய்யனார். இவர் கொத்தனாராக பணிபுரிந்துவருகிறார். வாரம் முழுவதும் பணி செய்துவிட்டு ஞாயிற்றுகிழமைகளில் அய்யனார் நண்பர்களோடு மது அருந்துவது வழக்கம். அதனைபோன்றே நேற்று இரவு டி‌.கல்லுபட்டி பேருந்து நிலையம் அருகே தனது நண்பர்களுடன் அய்யனார் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அய்யனாருக்கும் அவரது நண்பர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரோந்துபணியில் ஈடுபட்ட டி.கல்லுப்பட்டி காவல்நிலைய போலீசார் அய்யனாரை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

காவல்நிலையத்திலே அய்யனார் போதையில் மயங்கி விழுந்துள்ளார். உடனே காவலர்கள் அய்யனாரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே அய்யனார் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அய்யனார் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக டி.கல்லுப்பட்டி போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.