×

இவர்களை கொரோனா அதிகம் தாக்குகிறது : சுகாதாரத்துறை தகவல்!

கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகி வருகிறது என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், “இஎஸ்ஐ மருத்துவமனையில் 50 படுக்கைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதை நம்மால் கண்கூடாக பார்க்கமுடிகிறது. கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகி வருகிறது. ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் , குழந்தைகளுக்கான தடுப்பூசி மையங்கள் ஆகியவை
 

கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகி வருகிறது என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், “இஎஸ்ஐ மருத்துவமனையில் 50 படுக்கைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதை நம்மால் கண்கூடாக பார்க்கமுடிகிறது. கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகி வருகிறது. ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் , குழந்தைகளுக்கான தடுப்பூசி மையங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகள் மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பரிந்துரைக்கும் தடுப்பூசிகளே தமிழக அரசு பொது மக்களுக்கு செலுத்தி வருகிறது. இதனால் கூடிய விரைவில் மாநிலம் முழுவதும் தடுப்பூசி அனைவர்க்கும் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம். 60 வயதை கடந்த சர்க்கரை நோய் மற்றும் இதய பிரச்சனை , உடல் பருமன் கொண்டவர்களுக்கு கொரோனா அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நீரிழிவு, உடல்பருமன், இதய பிரச்சனை கொண்ட நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பு மருந்துகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் விரைவில் முதல்வரால் தொடங்கி வைக்கப்படும்” என்றார்.