×

திமுக பிரமுகரை கேள்வி கேட்ட காவலர்… இரவோடு இரவாக ஆயுதப்படைக்கு மாற்றம்!

தஞ்சை அண்ணாசாலையில் உரிய ஆவணம் இன்றி சென்ற சரக்கு வாகனத்தை, அப்பகுதியில் தணிக்கையில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் மோகன் மடக்கினர். உரிய ஆவணம் இன்றி வாகனம் சென்றதாக கூறி ரூ. 200 அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளார். உடனே சரக்கு வாகன ஓட்டுனர் தஞ்சை நகர திமுக துணைச் செயலாளர் நீலகண்டன் என்பவருக்கு போன் செய்ய, சம்பவ இடத்திற்கு வந்த அவர், வாகனத்தை விடுவிக்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் மோகன் , இதுக்கு
 

தஞ்சை அண்ணாசாலையில் உரிய ஆவணம் இன்றி சென்ற சரக்கு வாகனத்தை, அப்பகுதியில் தணிக்கையில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் மோகன் மடக்கினர். உரிய ஆவணம் இன்றி வாகனம் சென்றதாக கூறி ரூ. 200 அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளார். உடனே சரக்கு வாகன ஓட்டுனர் தஞ்சை நகர திமுக துணைச் செயலாளர் நீலகண்டன் என்பவருக்கு போன் செய்ய, சம்பவ இடத்திற்கு வந்த அவர், வாகனத்தை விடுவிக்குமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் மோகன் , இதுக்கு முன்னாடி வந்துடுறீங்களே, எனது தெருவில் இரண்டு மாதமாக தண்ணி வரல; அதை சரி செய்ய வரலயே என்று கூறியதுடன், வீடியோ எடுங்க, சிஎம்க்கு அனுப்புங்க என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து உதவி ஆய்வாளர் மோகன் இரவோடு இரவாக ஆயுதபடைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.