×

மருமகனுடன் சேர்ந்து மகளை தீர்த்து கட்டிய தாய்

மருமகனுடன் சேர்ந்து ஒரு தாய், மகளைக் தீர்த்துக் கட்டிய சம்பவம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தமபாளையம் அடுத்த ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் கல்யாண் குமார். ரஞ்சிதா என்பவரை திருமணம் செய்த இவருக்கு எட்டு வயதில் ஒரு மகள் உள்ளார். கட்டிடத் தொழிலாளியாக இருந்து வரும் கல்யாண்குமார் திடீரென்று தனது மனைவி ரஞ்சிதா இறந்து விட்டதாக சொல்ல, ரஞ்சிதாவின் தாய் கவிதாவும் அதையே சொல்ல, அனைவரும் உடல் நலக்குறைவால் திடீரென்று ரஞ்சிதா இறந்துவிட்டதாக கருதி
 

மருமகனுடன் சேர்ந்து ஒரு தாய், மகளைக் தீர்த்துக் கட்டிய சம்பவம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தமபாளையம் அடுத்த ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் கல்யாண் குமார். ரஞ்சிதா என்பவரை திருமணம் செய்த இவருக்கு எட்டு வயதில் ஒரு மகள் உள்ளார். கட்டிடத் தொழிலாளியாக இருந்து வரும் கல்யாண்குமார் திடீரென்று தனது மனைவி ரஞ்சிதா இறந்து விட்டதாக சொல்ல, ரஞ்சிதாவின் தாய் கவிதாவும் அதையே சொல்ல, அனைவரும் உடல் நலக்குறைவால் திடீரென்று ரஞ்சிதா இறந்துவிட்டதாக கருதி இறுதிச் சடங்குகளை செய்தனர்.

ரஞ்சிதாவின் உடல் சுடுகாடு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது. இதற்கிடையில் சிலர் ரஞ்சிதாவின் மரணத்தில் சந்தேகம் தெரிவித்து போலீசாரிடம் தகவல் புகார்ரளித்ததால் போலீசார் விரைந்து வந்து பாதி எரிந்த ரஞ்சிதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதன்பின்னர் ரஞ்சிதாவின் கணவர் கல்யாணகுமார் மற்றும் தாயார் கவிதாவிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கணவரும் ரஞ்சிதாவின் தாயாரும் சேர்ந்து ரஞ்சிதாவை கழுத்தை நெரித்துக் கொன்றது தெரியவந்தது. மேலும் விசாரணையில் ரஞ்சிதாவுக்கும் ஆனைமலையன்பட்டி யைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த கள்ள உறவை கைவிடச் சொல்லி கணவன் கல்யாணகுமார், தாயார் கவிதாவும் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால் இருவரின் பேச்சையும் கேட்காமல் ரஞ்சிதா கள்ள உறவை தொடர்ந்ததால் அவரை எதிர்த்து கட்டி விடுவது என்று ரஞ்சிதாவும் வனிதாவும் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து கல்யான்குமாரும், கவிதாவும் சேர்ந்து ரஞ்சிதாவின் கழுத்தில் சேலையை சுற்றி இருக்கியதில் அவர் உயிரிழந்தார். விசாரணையில் கிடைத்த தகவலை அடுத்து கல்யாண்குமார், கவிதா மற்றும் உடந்தையாக இருந்த ஆனந்தகுமார் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.