×

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் முக்கியத்துவம்!

தர்ப்பணம், சிரார்த்தம் என்பதெல்லாம் தலைமுறைகளைத் தாண்டி நம் முதாதையர்களை நினைவு கூற, அவர்களை போற்றி வணங்க, அவர்களின் ஆசிர்வாதங்கள் பெற வகுக்கப்பட்டுள்ள சம்பிரதாய, சாஸ்த்திரப்படியான வழிபாட்டு முறைகளாகும். முதாதையர்கள் மறைந்து விட்டாலும் அவர்கள் நமது எண்ணங்களில் நினைவுகளில், நமது மரபு அணுக்களில் அடையாளங்களாக அவர்கள் வாழ்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் மறைந்தார்கள் என்று முடிந்து விடுவதில்லை. நம் வீட்டு சுவர்களில் அவர்கள் படமாக தொங்கிக் கொண்டிருந்தாலும், அவர்கள் வார்த்தைகளால் வாய் திறந்து பேசவில்லை என்றாலும் மனசீகமாக
 

தர்ப்பணம், சிரார்த்தம் என்பதெல்லாம் தலைமுறைகளைத் தாண்டி நம் முதாதையர்களை நினைவு கூற, அவர்களை போற்றி வணங்க, அவர்களின் ஆசிர்வாதங்கள் பெற வகுக்கப்பட்டுள்ள சம்பிரதாய, சாஸ்த்திரப்படியான வழிபாட்டு முறைகளாகும்.

முதாதையர்கள் மறைந்து விட்டாலும் அவர்கள் நமது எண்ணங்களில் நினைவுகளில், நமது மரபு அணுக்களில் அடையாளங்களாக அவர்கள் வாழ்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அவர்கள் மறைந்தார்கள் என்று முடிந்து விடுவதில்லை. நம் வீட்டு சுவர்களில் அவர்கள் படமாக தொங்கிக் கொண்டிருந்தாலும், அவர்கள் வார்த்தைகளால் வாய் திறந்து பேசவில்லை என்றாலும் மனசீகமாக நம்முடன் அவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நமது ஒவ்வொரு செயலிலும் அவர்களின் எச்சங்கள் இருக்கத்தான் செய்கிறது. நமது பிள்ளைகளிடம் கூட தாத்தா பாட்டிகளின் ஏதோ ஒரு பழக்கம் எப்போதோ எட்டிப்பார்ப்பதை காணமுடியும்.

மறைந்தவர்கள் தெய்வங்களாக இருந்து நம்மை வழிநடத்துவதாக நாம் கொள்ளும் நம்பிக்கைகள் தமது வாழவில் அனேக நன்மைகளை செய்யும என்பதை அறிந்த வகுக்கப்பட்டதுதான் தர்ப்பண வழிபாடு.

ஆடி அமாவாசை, பித்ரு தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறந்த நாள். சூரியனும், சந்திரனும் இணையும் நாளே ‘அமாவாசை’ ஆகும். கடக ராசியானது, சந்திரனின் சொந்த வீடாகும். சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதம் ஆடி.
தாய் ஸ்தானத்திற்குரிய சந்திரனும், தந்தை ஸ்தானத்திற்குரிய சூரியனும் இணையும் நாள் ஆடி அமாவாசை.

ஆடி அமாவாசை தினத்தில் நாம் செய்யும் தர்ப்பணத்தால், முன்னோர்களின் ஆசியையும் நாம் பெறலாம். ‘நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும், தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம்’ என்பது ஆன்றோர் வாக்கு. இது அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு தொடங்கும் காரியங்கள் வெற்றியாகவே முடியும் என்பதைக் குறிப்பதாகும்.

தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையுடன் செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். யாருக்கெல்லாம் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது பற்றி பலருக்கும் சந்தேகம் ஏற்படலாம் . தன் தகப்பனார், தன் தாத்தா, கொள்ளுத் தாத்தா, தன் அம்மா, தன் பாட்டி, தன் கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம்- அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் – அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம் . மேலும், யாருமில்லாமல் ஆதரவற்ற நிலையில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் மிகவும் விசேஷமானது என்றன சாஸ்திரங்கள் .

ஆடி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது என்கிறது சாஸதிரங்கள். காலையில் எழுந்து, அருகில் இருக்கும் கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் குளித்து விட்டு அதன் கரையில் அமர்ந்து, இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

முறைப்படி தர்ப்பணம் செய்து வைக்கும் அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், குளக்கரைகளில், கடற்கரையோரங்களில் இருப்பார்கள். அவர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். அதன்பின் முதியவர்கள், ஏழைகளுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் முதலான உதவிகளை வழங்க வேண்டும்.

வீட்டிற்கு சென்று சாமி மடம், அறை, அலமாரி எதிரே இலை போட்டு, இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் நைவேத்தியம் செய்ய வேண்டும். பின்னர் காக்கைகளை அழைத்து சாப்பாடு வைத்து விட்டு, பின்னர் நாம் சாப்பிட வேண்டும் .

அமாவாசை விரதம் , தர்ப்பணங்களால் முன்னோர்கள் மனதை திருப்தியுற செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெறுகும் அவர்களின் ஆசிர்வாதத்தால் தடைகள் நீங்கி எல்லா நலங்களும் கிடைக்கும் .

தர்ப்பண வழிபாடு செய்ய ஏற்ற தலங்களாக ராமேஸ்வரம், திருவையாறு, திலதர்ப்பணபுரி என பல தலங்கள் தீர்த்தகரைகளையும் சதுரகிரி போன்ற மலைத்தலங்களையும் முன்னோர்கள் குறிப்பட்டு இருந்தாலும் இன்றுள்ள ஊரடங்கு சூழலில் அவை சாத்தியம் அல்ல. கடல் நிராடல்களுக்கு, ஆலய தரிசனங்களுக்கு தடைகள் தொடர்கின்றன. எனவே இந்த ஆடி அமாவாசையில் முடிந்தளவு இருந்த இடத்திலேயே இருந்து சிரார்த்த தர்ப்பண காரியங்களை நிறைவேற்றதுவது நல்லது. முதையர்கள் புரிந்து கொண்டு நம்மை நிச்சயம் ஆசிர்வதிப்பார்கள். நலமே சூழட்டும்.

-மு.ரா.சுந்தரமூர்த்தி