×

தமிழ்நாடு அரசு இதை உணர்ந்து செயல்பட வேண்டும் : தினகரன் கோரிக்கை!

தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தைச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் கிழக்கு மேற்கு கடல் பகுதியில் ஒவ்வொரு வருடமும் இனப்பெருக்க காலம் என மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது . அந்த வகையில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் வருகின்ற 14ஆம் தேதி வரை 61
 

தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தைச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் கிழக்கு மேற்கு கடல் பகுதியில் ஒவ்வொரு வருடமும் இனப்பெருக்க காலம் என மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது . அந்த வகையில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் வருகின்ற 14ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு கடற்கரைப் பகுதிகளான திருவள்ளூர் மாவட்ட முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி விசைப் படகுகள் படகுகள் மூலமாக கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த 67 நாட்கள் கடலுக்கு சென்ற மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என்று விசைப்படகு உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் , “மீன்பிடி தடை காலத்தைப் பயன்படுத்தி மோசமான நிலையில் இருக்கும் தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தைச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.இந்த துறைமுகத்தின் நுழைவுவாயில் உள்ளிட்ட பகுதிகள் முற்றிலும் சேதமடைந்து கிடப்பதால் அடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகளையும் இதன்மூலம் தடுத்திட முடியும்.கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி முதல் மிடாலம் வரையிலான ஊர்களில் வசிக்கும் சுமார் 25 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் தேங்காய்பட்டணம் துறைமுகத்தை நம்பி இருப்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.