×

போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊதியக் குறைப்பு கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

கொரோனா தாக்கம் இந்தியாவில் குறையாத நிலையில் மேலும் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் 5 வது முறையாக நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிக்கும் என அறிவித்துள்ள தமிழக அரசு பொது பேருந்து போக்குவரத்து நாளை முதல் செயல்படும் என்றும் அவை 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க
 

கொரோனா தாக்கம் இந்தியாவில் குறையாத நிலையில் மேலும் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் 5 வது முறையாக நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதேபோல் தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிக்கும் என அறிவித்துள்ள தமிழக அரசு பொது பேருந்து போக்குவரத்து நாளை முதல் செயல்படும் என்றும் அவை 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் இயக்கப்படும் உள்ள அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகளில் 60 சதவீத பயணிகளுடன் இயக்க உள்ளதால் எவ்வளவு கட்டணம் வசூலிப்பது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா காரணமாக தமிழக அரசு வருவாயை இழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் போக்குவரத்து கழக பணியாளர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர், வத்தலக்குண்டு, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டர் பக்கத்தில், “தமிழக அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊதியக் குறைப்பு செய்யப்போவதாக கூறப்படுவது கண்டனத்திற்குரியது. இதனைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பணிமனைகளில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. இதனால் பேருந்து போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே, ஊழியர்களுக்கு முழுமையான ஊதியத்தை வழங்கிட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று பதிவிட்டுள்ளார்.