×

அறிவியல் ரீதியாக விரதங்களின் பலன்கள்!

ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் இருக்கின்றன. அறிவியல் ரீதியாக ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலை புதுப்பிப்பதே விரதத்தின் நோக்கமாகும். விரதம், உபவாசம் அதாவது நோன்பு என எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர் என்பதே உண்மை. மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதமாகும். விரதம் என்றாலே, நாம் உண்டி சுருக்கி, மற்றவருக்கு உணவு அளித்தல்தான்.கொரொனோ தொற்றினால் ஏற்பட்ட லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து அனைத்து நிறுவனங்களும் செயல்பட தொடங்கியுள்ளது. இதனால், மறுபடியும் ஆரம்பித்திலிருந்து ஒவ்வொருவரும் சாப்பிடக்கூட நேரமில்லாமல்,
 

விரதம், உபவாசம் என்றாலே சாப்பிடாமல் பட்டினியாக இருந்து கடவுளை வணங்குவது என்று நம்மில் நிறைய பேர் நினைப்பது உண்டு. நம் எண்ணங்களை ஒரு கட்டுப்பாடுடன் வைத்து, மனதை சந்தோஷமாக வைப்பதே விரதத்தின்  முக்கிய நோக்கம்.  

ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் இருக்கின்றன. அறிவியல் ரீதியாக ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலை புதுப்பிப்பதே விரதத்தின் நோக்கமாகும். விரதம், உபவாசம் அதாவது நோன்பு என எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர் என்பதே உண்மை.

மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதமாகும். விரதம் என்றாலே, நாம் உண்டி சுருக்கி, மற்றவருக்கு உணவு அளித்தல்தான்.
கொரொனோ தொற்றினால் ஏற்பட்ட லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து அனைத்து நிறுவனங்களும் செயல்பட தொடங்கியுள்ளது. இதனால், மறுபடியும் ஆரம்பித்திலிருந்து ஒவ்வொருவரும் சாப்பிடக்கூட நேரமில்லாமல், வேலை வேலை என ஓடிக்கொண்டிருக்கிறோம்.

பொதுவாகவே, நமது உடலின் ஜீரண மண்டலத்துக்கு வாரத்துக்கு ஒருமுறை விரதம், உபவாசம், பட்டினியிருத்தல் அவசியம். அப்பொழுதுதான் உடல் நல்ல ஆரோக்கியத்துடனும், உற்சாகத்தோடும் செயல்பட முடியும்.

விரதம் இருக்கும் காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே மிகவும் உயர்வானதாகும். காலப்போக்கில், சரிவிகித உணவு எடுத்துக்கொள்ள முடியாதது வேலைப்பளு மற்றும் உடல் சோர்வு ஏற்படுபவர்கள், நோய் வாய் பட்டவர்களால் நாள் முழுவதும் சாப்பிட முடியமால் இருக்க முடியாததால் பால், பழம், பழச்சாறு போன்ற நீர் ஆகாரங்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

நமது விரத முறைகள் மற்றும் ஆன்மீக தொடர்பான பழக்கவழக்கங்கள் பெரும்பாலும் சமஸ்கிருத மொழியில் இருந்தே கடைப்பிடிக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் ‘ஃபல்’ என்றால் பழம் என்று பொருள் ஆகும்.
பழத்தை உணவாக எடுத்துக் கொள்வதே பலகாரம் என்பதாகும்.

இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களை எடுத்துக் கொள்வது தான் ‘பலகாரம்’ என்ற சொல்லின் அர்த்தம். இவ்வாறு செய்வது உண்மையான விரதமாக இருக்காது.

ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே விரதத்தின் நோக்கம். எனவே டிபன் வகையைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே உண்மையான விரதமாகும்.
-வித்யா ராஜா