×

“பிரசாதம் போச்சேடா அம்பி” கோயிலை திறந்தாளும் புலம்பியபடி வந்த பக்தர்கள்.

ஐந்து மாதங்களுக்கு பிறகு தமிழக அரசு ஊரடங்கை தளர்த்தியதால் இன்று காலையில் தமிழகத்திலுள்ள அனைத்து வழிபாட்டு தளங்களும் திறக்கப்பட்டன . மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரானாவை கட்டுப்படுத்தும் பொருட்டு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வந்தது .அதனால் கோவில்கள் திறக்கப்படாமல் இருந்ததால் பக்தர்கள் பெரும் இன்னலுக்குள்ளாகினர் ,இந்நிலையில் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஊரடங்கில் பெருமளவு தளர்வு கொண்டு வரப்பட்டு ,மால்கள் ,கோவில்கள் வழக்கம்போல திறக்க அரசு உத்தரவிட்ட து .இதன் எதிரொலியாக இன்று தமிழகத்திலுள்ள
 

ஐந்து மாதங்களுக்கு பிறகு தமிழக அரசு ஊரடங்கை தளர்த்தியதால் இன்று காலையில் தமிழகத்திலுள்ள அனைத்து வழிபாட்டு தளங்களும் திறக்கப்பட்டன .

மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரானாவை கட்டுப்படுத்தும் பொருட்டு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வந்தது .அதனால் கோவில்கள் திறக்கப்படாமல் இருந்ததால் பக்தர்கள் பெரும் இன்னலுக்குள்ளாகினர் ,இந்நிலையில் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஊரடங்கில் பெருமளவு தளர்வு கொண்டு வரப்பட்டு ,மால்கள் ,கோவில்கள் வழக்கம்போல திறக்க அரசு உத்தரவிட்ட து .இதன் எதிரொலியாக இன்று தமிழகத்திலுள்ள அனைத்து பெரிய மற்றும் சிறிய கோவில்கள் திறப்பட்டன .இதன் விளைவாக பக்தர்கள் அதிகாலையில் குளித்துவிட்டு , சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் கூட்டமாக குவிந்தனர் .


பல கோவில்களில் சமூக இடைவெளிகள் எதுவும் பின்பற்ற படாமல் சாமி தரிசனம் செய்தனர் .சில கோவில்களில் பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றியும் ,மாஸ்க் அணிந்தும் சாமி கும்பிட்டார்கள் ,
ஆனால் பல கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் நிறுத்தப்பட்டுள்ளது
.இதன் காரணமாக பிரசாதத்திற்காக கோவிலுக்கு வரும் சிலர் அது கிடைக்காததால் ஏமாந்தார்கள் .இருந்தாலும் பகவானை தரிசனம் செய்தது புண்ணியமாக கருதி பலர் சாமி கும்பிட்டு சென்றார்கள் .இதுமாதிரி மீனாட்சியம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் கொடுப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் கூடிய விரைவில் அதற்கான உத்தரவு அரசு பிறப்பித்ததும் கொடுக்கப்படுமென்று கோவில் நிர்வாகிகள் கூறினார்கள்.