×

ஜாமீனில் வந்த அடுத்த நிமிடமே கிடாவுடன் டிக் டாக் செய்த இளைஞர்கள்… மன்னிப்பு கேட்க வைத்த போலீசார்!

மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து கொண்டு கிடா சண்டையை நடத்தியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி கிடா சண்டை நடத்திய இளைஞர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தி போலீசார் அவர்களை நிபந்தனை ஜாமீனில் விடுவித்தனர். இதையடுத்து வெளியில் வந்த அந்த இளைஞர்கள் தங்கள் கிடாவுடன் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் டிக் டாக் செய்துள்ளனர். அதில் ஜெயில்கள்
 

மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து கொண்டு கிடா சண்டையை நடத்தியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி கிடா சண்டை நடத்திய இளைஞர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தி போலீசார் அவர்களை நிபந்தனை ஜாமீனில் விடுவித்தனர்.

இதையடுத்து வெளியில் வந்த அந்த இளைஞர்கள் தங்கள் கிடாவுடன் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் டிக் டாக் செய்துள்ளனர். அதில் ஜெயில்கள் தங்களுக்காக தான் கட்டியிருக்கிறார்கள் என்பது போல வசனம் இருந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக போலீசார் மீண்டும் அவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பினர்.

பின்னர் தங்களது தவறினை உணர்ந்த அந்த டிக் டாக் இளைஞர்கள் காவல் நிலையம் முன்பாக இனி இந்த ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற தவறுகள் செய்ய மாட்டோம் என்று மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.