×

பச்சிளங் குழந்தையின் கைவிரல் துண்டிப்பு …குளுக்கோஸ் ஒயருக்கு பதிலாக விரலை துண்டித்ததாக புகார்!

செவிலியர்கள் அலட்சியத்தால் பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையின் கை விரல் துண்டிக்கப்பட்டதாக பெற்றோர் புகாரளித்துள்ள சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கொரோனா பரவல் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் இதர நோயாளிகளுக்கும், உரிய மருத்துவ சேவை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக முன்கூட்டியே கொரனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. அதே சமயம் அரசு மருத்துவமனைகளில் சில அலட்சியப் போக்கும் ஆங்காங்கே நடைபெறுகிறது. நோயாளிகளுக்கு
 

செவிலியர்கள் அலட்சியத்தால் பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையின் கை விரல் துண்டிக்கப்பட்டதாக பெற்றோர் புகாரளித்துள்ள சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கொரோனா பரவல் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் இதர நோயாளிகளுக்கும், உரிய மருத்துவ சேவை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக முன்கூட்டியே கொரனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. அதே சமயம் அரசு மருத்துவமனைகளில் சில அலட்சியப் போக்கும் ஆங்காங்கே நடைபெறுகிறது. நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அவர்களை அலைக்கழிப்பது, அவர்களை தரக்குறைவாக நடத்துவது போன்ற செயல்பாடுகளும் , மருத்துவ முறையில் சில கோளாறுகளையும் அரசு மருத்துவமனைகளில் இன்னும் சிலர் செய்து வருகிறார்கள் என்பது கசப்பான உண்மை.

இந்நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் கைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையின் கட்டைவிரலை செவிலியர்கள் கவனக்குறைவாக இருந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. குளுக்கோஸ் ஒயரை அகற்றுவதற்கு பதில் குழந்தையின் கைவிரல் துண்டிக்கப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்காததால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை அரசு மருத்துவமனையில் விரல் துண்டிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தஞ்சை அரசு மருத்துவமனையில் ஆர்எம்ஓ உஷாதேவி விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.