×

எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கை காலியாக உள்ளது என்று அறிய இணைய வசதி! – தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் எந்த எந்த மருத்துவமனைகளில் எவ்வளவு படுக்கை வசதிகள் காலியாக உள்ளன என்ற விவரத்தை மக்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணையதள சேவையைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதற்கென தனி அதிகாரிகளை நியமிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது என்று பரவலான குற்றச்சாட்டு உள்ளது. அரசு மற்றும் ஆளுங்கட்சித் தரப்பிலே படுக்கை வசதிகள் காலியாக உள்ளன, இதுவரை ஐந்து பேருக்கு மட்டுமே
 

தமிழகத்தில் எந்த எந்த மருத்துவமனைகளில் எவ்வளவு படுக்கை வசதிகள் காலியாக உள்ளன என்ற விவரத்தை மக்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணையதள சேவையைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதற்கென தனி அதிகாரிகளை நியமிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது என்று பரவலான குற்றச்சாட்டு உள்ளது. அரசு மற்றும் ஆளுங்கட்சித் தரப்பிலே படுக்கை வசதிகள் காலியாக உள்ளன, இதுவரை ஐந்து பேருக்கு மட்டுமே வென்டிலேட்டர் பயன்படுத்தப்பட்டது என்று எல்லாம் கூறினாலும், மூத்த மருத்துவர்கள், பிரபலங்கள் பலரும் படுக்கை வசதியின்றி கொரோனா நோயாளி புறக்கணிக்கப்பட்டு வருவதாக தங்கள் சொந்த அனுபவங்களை வெளியிட்டு வந்தனர். இதனால், மக்கள் மத்தியில் மேலும் பீதியும் பதற்றமும் ஏற்பட்டது. இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகளை மக்கள் தெரிந்துகொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மருத்துவமனையில் காலியாக உள்ள படுக்கை விவரங்களை இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக பல்வேறு முடிவுகளை அரசு எடுத்துள்ளது. அந்த அடிப்படையில் ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், உடனடியாக தங்கள் மருத்துவமனைக்காக ஒரு பொறுப்பு அலுவலரை (நோடல் ஆபீசர்) நியமிக்க வேண்டும். உடனுக்குடன் பதிவேற்றும் பொறுப்பு அதிகாரி, அரசு உருவாக்கியுள்ள, https://stopcorona.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக, மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகளின் எண்ணிக்கைகள், உள் நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் காலியாக உள்ள படுக்கைகள் எண்ணிக்கை ஆகியவற்றை அவ்வப்போது பதிவேற்ற வேண்டும் என்று அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் தமிழக சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள் ஆகியவற்றை அறிந்து கொண்டு, சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக அமையும். பொதுமக்கள் அச்சத்தைப் போக்கி, அரசும், தனியாரும் வெளிப்படைத்தன்மையுடன், மருத்துவமனை விவரங்களை இணையதளத்தில் ஏற்ற வேண்டும். கூடுதல் படுக்கை வசதி தனியார் மருத்துவமனையில் கூடுதலாக படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை, தனியார் மருத்துவமனைகள் ஏற்றுக் கொண்டுள்ளன. தனியார் மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.