×

உலகத்திலேயே தமிழகத்தில் மட்டும் தான் இறப்பு விகிதம் குறைவு – முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதனை தடுக்க அனைத்து கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக ஒரு நாளைக்கு 1000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுப்பது சாத்தியம் இல்லை என்றும் மக்கள் அவசியமாக
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதனை தடுக்க அனைத்து கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக ஒரு நாளைக்கு 1000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழக மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுப்பது சாத்தியம் இல்லை என்றும் மக்கள் அவசியமாக தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்றும் தமிழகத்தில் தான் அதிக மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டும் வீடு திரும்பியுள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து, உலகத்திலேயே தமிழகத்தில் தான் கொரோனா உயிரிழப்பு குறைவு என்று கூறிய அவர் நம் நாட்டின் பொருளாதாரத்தை காக்க அனைவரும் கடமை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். மேலும், தமிழகபட்சமாக தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை மையங்கள் இருக்கிறது என்றும் ஒரு நாளைக்கு 13 ஆயிரம் பரிசோதனைகள் நடைபெறுவதாகவும் கூறினார்.