×

ஊரடங்கு தளர்வு: தியேட்டர்கள், கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி

தமிழகத்தில் ஊரடங்கு வருகின்ற 23ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழகத்தில் மாவட்ட வாரியாக நோய் தொற்று பரவும் தன்மை ,அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனையின் முடிவில் வருகின்ற செப்டம்பர் 6ஆம் தேதி வரை ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக
 

தமிழகத்தில் ஊரடங்கு வருகின்ற 23ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக நோய் தொற்று பரவும் தன்மை ,அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனையின் முடிவில் வருகின்ற செப்டம்பர் 6ஆம் தேதி வரை ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊரடங்கு நீட்டிப்புடன் பல்வேறு தளர்வுகளும் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:-

* அனைத்துக் கல்லூரிகளும் வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதி

* அனைத்து பட்டயபடிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும் . ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும்.

* 50 சதவீத பார்வையாளர்களுடன் வருகின்ற இருபத்தி மூன்றாம் தேதி முதல் திரையரங்குகள் இயங்க அனுமதி. திரையரங்க பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப் பட்டிருப்பதைப் அரங்கு உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்

* கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் கடைகள் மற்றும் சிறு வியாபாரிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்

*உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள்,படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டும் நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி

* அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் 23ம் தேதியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்க அனுமதி

* தகவல் தொழில்நுட்பம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி

* அங்கன்வாடி மையங்கள் வருகின்ற ஒன்றாம் தேதி முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதி

* மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதி.

* நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி

* தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி

* தடுப்பூசி விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மது கூடங்கள் செயல்பட அனுமதி

* ஆந்திரா கர்நாடக மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க நடவடிக்கை