×

கொரோனா பரவலில் தமிழகம் 3ஆவது இடம்.. மத்திய அரசு பகீர் தகவல்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுப்படுத்தும் வண்ணம் பல மாநில அரசுகள், ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலாகியுள்ளது. இருப்பினும், பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில், இந்திய அளவில் கொரோனா பரவலில் தமிழகம் 3ஆவது இடத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் பூஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தினசரி கொரோனா பாதிப்பில் கர்நாடகா,
 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுப்படுத்தும் வண்ணம் பல மாநில அரசுகள், ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலாகியுள்ளது. இருப்பினும், பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில், இந்திய அளவில் கொரோனா பரவலில் தமிழகம் 3ஆவது இடத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் பூஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தினசரி கொரோனா பாதிப்பில் கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகம் உள்ளது. இந்தியாவில் 13 மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கு அதிகமாக கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 6 மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். 17 மாநிலங்களில் 50 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப், புதுச்சேரியில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பீகார், குஜராத் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு குறைவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவலில் தமிழகம் 3ம் இடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.