×

பாரம்பரிய நாடக கலைஞர்களுக்கு நிதியுதவி.. தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. லட்சக் கணக்கான மக்களை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 23,000க்கும் மேற்பட்டோருக்கு பரவியுள்ளது. இதனை தடுக்க 2 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. அதனால் மக்கள் பலர் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு பல தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு,
 

கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. லட்சக் கணக்கான மக்களை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 23,000க்கும் மேற்பட்டோருக்கு பரவியுள்ளது. இதனை தடுக்க 2 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. அதனால் மக்கள் பலர் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு பல தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு தொழில்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது. மேலும், சலூன், டீக்கடை, பார்லர் உள்ளிட்ட பல கடைகளும் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் செயல்பட அனுமதி அளித்துள்ளது. இதனிடையே மக்களுக்கு பல தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். ஆனால் ஊரடங்கால் முற்றிலுமாக முடங்கியிருக்கும் நாடக கலைஞர்களுக்கு இதுவரை யாரும் உதவி வழங்கவில்லை.

நாடக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்ட தமிழக அரசு, அவர்கள் ஆடை, இசைக்கருவிகள் மற்றும் அணிகலன்கள் வாங்குவதற்காக 100 பாரம்பரிய நாடக கலைஞர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என்றும் 100 கலைகுழுக்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.