×

இளங்கலை வேளாண் படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு தொடக்கம்

கோவை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக, இன்று தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நிவர் புயல் காரணமாக மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இதன்படி, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று துவங்கியது. இதில், இளங்கலை வேளாண் படிப்புகளுக்கான 3 ஆயிரத்து 100 இடங்களுக்கு, 15 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 

கோவை

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக, இன்று தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நிவர் புயல் காரணமாக மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

இதன்படி, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று துவங்கியது. இதில், இளங்கலை வேளாண் படிப்புகளுக்கான 3 ஆயிரத்து 100 இடங்களுக்கு, 15 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மாணவர்களுக்கு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இணையவழியில் கல்லூரிகளையும், பாடப் பிரிவுகளையும் தேர்ந்தெடுக்கலாம்.

இதனை தொடர்ந்து, வரும் 30ஆம் தேதி முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்று திறனாளிகள் ஆகியோருக்கும்,
டிசம்பர் ஒன்றாம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வும் நடைபெறுகின்றது. இதனை தொடர்ந்து டிசம்பர் 15ஆம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.