×

‘அதிக குடிபோதை’ போலீஸ் ஸ்டேஷனில் மயங்கி விழுந்த இளைஞர் திடீர் மரணம்!

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியில் வசித்து வரும் முத்தையா என்பவரின் மகன் அய்யனார். இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மதுப் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று தனது நண்பர்களுடன் அய்யனார், மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது, ஸ்நாக்ஸ் தீர்ந்து விட்டதால் அய்யனார் வாங்கி வரச் சென்ற கேப்பில் அவரது நண்பர்கள் மதுவை குடித்து காலி செய்துள்ளனர். இதனால் கடுப்பான அய்யனார், நண்பர்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்துள்ளார். அச்சமயம் அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்,
 

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியில் வசித்து வரும் முத்தையா என்பவரின் மகன் அய்யனார். இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மதுப் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று தனது நண்பர்களுடன் அய்யனார், மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது, ஸ்நாக்ஸ் தீர்ந்து விட்டதால் அய்யனார் வாங்கி வரச் சென்ற கேப்பில் அவரது நண்பர்கள் மதுவை குடித்து காலி செய்துள்ளனர். இதனால் கடுப்பான அய்யனார், நண்பர்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்துள்ளார்.

அச்சமயம் அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அய்யனாரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். இதை தொடர்ந்து, அய்யனாரின் உறவினர்களை அழைத்த போலீசார் அவர் அதிக குடிபோதையில் இருப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். அதன் படி அய்யனாரை உறவினர்கள் காவல்நிலையத்தின் வாசல் வரை அழைத்து வந்த நிலையில், அவர் வாசலில் மயங்கி விழுந்திருக்கிறார். உடனடியாக உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அய்யனாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதிக குடிபோதையில் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த அய்யனார் திடீரென உயிரிழந்தது அப்பகுதி உறவினர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மதுபோதை அதிகமானதால் அவர் உயிரிழந்தாரா? அல்லது நண்பர்களுடனான தகறாரில் அவருக்கு உள் காயம் ஏதும் ஏற்பட்டதா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.