×

கல்லூரிகள் திறப்பு : முதல் நாளிலேயே வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்!

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் செயல்பட்டு வந்த அரசு போக்குவரத்து கழகத்தின் கல்லூரி, 2 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவக் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டது. பொதுவாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ஒரு ஆண்டுக்கு ரூ.13,620 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த கல்லூரியில் மட்டும் கடந்த 2 ஆண்களுமே ரூ.3.85 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக பலமுறை
 

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் செயல்பட்டு வந்த அரசு போக்குவரத்து கழகத்தின் கல்லூரி, 2 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவக் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டது. பொதுவாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ஒரு ஆண்டுக்கு ரூ.13,620 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த கல்லூரியில் மட்டும் கடந்த 2 ஆண்களுமே ரூ.3.85 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், கல்லூரிகள் திறக்கப்பட்ட முதல் நாளான இன்று வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வாசலில் அமர்ந்து அரசு மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மாணவர்களுடன் இணைந்து பெற்றோர்களும் போராட்டம் நடத்தினர். பிற கல்லூரிகளில் வசூலிக்கப்படுவதை போலவே இந்த கல்லூரியிலும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.