×

கல்விக் கடன் மறுப்பு.. மாணவி எடுத்த விபரீத முடிவு!

மதுரை தெப்பக்குளம் அருகே கல்விக் கடன் மறுக்கப்பட்டதால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெப்பகுளம், தேவிநகர் பகுதியில் வசித்து வந்தவர் மாணவி தாரணி. இவர் தனது கல்லூரி படிப்பிற்காக கல்விக்கடன் விண்ணப்பித்திருந்துள்ளார். அதற்கான நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், ஆவணக்கட்டணம் ரூ.1.27 லட்சத்தையும் செலுத்தியுள்ளார். ஆனால், அவரது கல்விக்கடன் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தாரணி, நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் உடலை
 

மதுரை தெப்பக்குளம் அருகே கல்விக் கடன் மறுக்கப்பட்டதால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தெப்பகுளம், தேவிநகர் பகுதியில் வசித்து வந்தவர் மாணவி தாரணி. இவர் தனது கல்லூரி படிப்பிற்காக கல்விக்கடன் விண்ணப்பித்திருந்துள்ளார். அதற்கான நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், ஆவணக்கட்டணம் ரூ.1.27 லட்சத்தையும் செலுத்தியுள்ளார். ஆனால், அவரது கல்விக்கடன் மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தாரணி, நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

கல்விக் கடன் பெறும் மாநிலங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. கடந்த மார்ச் 15ம் தேதி லோக் சபாவில், கல்விக்கடன் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த தகவலை உறுதிப் படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.