×

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

தூத்துக்குடி மாவட்டத்தில் நிறுவப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததால் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது. அந்த வழக்கின் தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தடை தொடரும் என அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், மதிமுக,
 

தூத்துக்குடி மாவட்டத்தில் நிறுவப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததால் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது. அந்த வழக்கின் தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தடை தொடரும் என அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது.

 உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், மதிமுக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.