×

ஈரோட்டில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு கூடுதலாக இரண்டு சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது குறிப்பாக மாநகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது பேதமின்றி அனைவரையும் வைரஸ் தாக்கி வருகிறது ஈரோடு மாவட்டத்தில் வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை தினமும் சதமடித்து வருகிறது இந்நிலையில் நேற்று மாலை சுகாதார துறையினர் வெளியிட்டுள்ள பட்டியலில் மேலும் 143 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதில் மாநகர் பகுதியில் மட்டும்
 


ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது குறிப்பாக மாநகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது பேதமின்றி அனைவரையும் வைரஸ் தாக்கி வருகிறது ஈரோடு மாவட்டத்தில் வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை தினமும் சதமடித்து வருகிறது இந்நிலையில் நேற்று மாலை சுகாதார துறையினர் வெளியிட்டுள்ள பட்டியலில் மேலும் 143 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதில் மாநகர்

பகுதியில் மட்டும் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2396 ஆக உயர்ந்து உள்ளது அதே நேரத்தில் நேற்று சிகிச்சை முடிந்து குணமாகி 81 பேர் வீடு திரும்பினார் இதையடுத்து குணமடைந்து எண்ணிக்கை ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது தற்போது சிகிச்சையில்ஆயிரத்து 65 பேர் உள்ளனர் நேற்று பவானியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார் இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக

FILE PHOTO: Medical staff with protective clothing are seen inside a ward specialised in receiving any person who may have been infected with coronavirus, at the Rajiv Ghandhi Government General hospital in Chennai, India, January 29, 2020. REUTERS/P. Ravikumar/File Photo

உயர்ந்துள்ளது தற்போது வைரஸால் பாதித்தவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை பெருந்துறையில் உள்ள திருமண மண்டபம் அந்தியூர் தாளவாடியில் உள்ள தனியார் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனினும் நாளுக்கு நாள் பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சித்தோடு பொறியியல்

கல்லூரி திண்டல் உள்ள தனியார் பள்ளி ஆகிய இடங்களில் தலா 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணி நடந்து வருவதாக சுகாதார துறை பணியாளர்கள் தெரிவித்தனர் மேலும் நேற்று முன்தினம் வரை ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 236 பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ரமேஷ் கந்தசாமி