×

மறைந்த காங்கிரஸ் எம்.பி வசந்த்குமார் படத்துக்கு மு.க ஸ்டாலின் மரியாதை!

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்த் குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையால் கொரோனாவில் இருந்து மீண்ட அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் கடந்த 28 ஆம் தேதி காலமானார். மருத்துவமனையில் இருந்து அவர் மீண்டு வந்து விடுவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அவரின் உயிர் பிரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, வசந்தகுமாரின் உடல் சென்னை திநகரில் இருக்கும் அவரது இல்லத்தில்
 

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்த் குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையால் கொரோனாவில் இருந்து மீண்ட அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் கடந்த 28 ஆம் தேதி காலமானார். மருத்துவமனையில் இருந்து அவர் மீண்டு வந்து விடுவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அவரின் உயிர் பிரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, வசந்தகுமாரின் உடல் சென்னை திநகரில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் வசந்த்& கோ ஊழியர்களின் அஞ்சலிக்காகவும் சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கில் காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டது. அதன்பின்னர் , வசந்த்குமாரின் உடல் சென்னையில் இருந்து சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த எம்பி வசந்த்குமாரின் உருவப்படம் சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்படுள்ளது.

இந்த நிலையில், மறைந்த காங்கிரஸ் எம்.பி வசந்த்குமார் படத்துக்கு மரியாதை செலுத்த திமுக தலைவர் முக ஸ்டாலின் சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றுள்ளார். அவருடன் திமுக எம்.பி கனிமொழி, டிஆர் பாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.