×

வேலை போய்விட்ட மன அழுத்ததால் தவறு செய்துவிட்டேன்!! விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர் மன்னிப்பு கேட்டு வீடியோ

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்வியல் படமான ‘800’ என்னும் திரைப்படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியிருந்தார். இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட முத்தையா படத்தில், விஜய் சேதுபதி நடிக்க கூடாது என எதிர்ப்புக் குரல் எழுந்தது. @ItsRithikRajh என்ற ஐடியில் ஆபாசமாக மிரட்டல் விடுத்த அந்த நபர் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். இந்நிலையில்
 

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்வியல் படமான ‘800’ என்னும் திரைப்படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியிருந்தார். இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட முத்தையா படத்தில், விஜய் சேதுபதி நடிக்க கூடாது என எதிர்ப்புக் குரல் எழுந்தது. @ItsRithikRajh என்ற ஐடியில் ஆபாசமாக மிரட்டல் விடுத்த அந்த நபர் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி குடும்பம் குறித்து அவதூறு பதிவிட்டதாக கூறும் நபர் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ விஜய் சேதுபதி மற்றும் அவரது மகள் குறித்து தவறாக பேசிய இந்திய வம்சாவளியை சேர்ந்த இலங்கை நபர் நான் தான். உலக தமிழர்கள் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். சின்ன குழந்தையை நான் தவறாக பேசிவிட்டேன். என் வாழ்நாளில் இதுபோன்று நான் யாரையும் இப்படி பேசியது கிடையாது. திட்டுனது இல்லை. இந்த கொரோனாவால் என் வேலை பறிபோகிவிட்டது.

இலங்கை யுத்தம் மற்றும் இப்படி ஒரு சர்ச்சைக்குள்ளான படத்தில் எல்லாம் தெரிந்தும் விஜய் சேதுபதி நடிக்கிறாரா? என்ற கோபத்தில்தான் அவரது மகள் குறித்து அவதூறாக ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டேன்.. என் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு தவறை நான் மீண்டும் செய்ய மாட்டேன். விஜய் சேதுபதி அண்ணா மற்றும் உங்கள் மனைவி, மகளிடம் நான் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். வேலைக்கிடைக்காத விரக்தியில் மனநிலை பாதிக்கப்பட்டு அப்படி பதிவு செய்து விட்டேன். தயவுசெய்து உங்கள் உடன்பிறவா சகோதரா நினைத்து மன்னித்துவிடவும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.