×

அஷ்ட ஐஸ்வரியத்தையும் தரும் அலைமகளின் ஸ்ரீ சூக்தம்!

அலைமகளின் அருள் சுரக்கும் தினமாகவும் திகழும் நவராத்திரின் திருநாளில் அலைமகளாம் மகாலட்சுமியை வழிபட்டால், நம் வீட்டில் அஷ்ட ஐஸ்வரியங்களும் குறையாது பெருகும். அதிலும் திருமகளின் மகிமைகளை அறிந்து வழிபட்டால், நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நீக்கமற நிறைந்திருக்கும். வேதங்கள் திருமகளைப் பலவாறு போற்றுகின்றன. ஸ்ரீ சூக்தம் அலைமகளைப் போற்றும் முதன்மையான நூல். சிவமகா புராணத்திலுள்ள காசிக்காண்டத்தில் இடம்பெற்றுள்ள பகுதி லட்சுமி பஞ்சகம். பக்தர்கள பலரும் திருமகள் திருவருளைப் பெறும் வகையில் அவளைப் போற்றி துதித்துள்ளனர். “ஸ்ரீ சூக்தம்”
 

அலைமகளின் அருள் சுரக்கும் தினமாகவும் திகழும் நவராத்திரின் திருநாளில் அலைமகளாம் மகாலட்சுமியை வழிபட்டால், நம் வீட்டில் அஷ்ட ஐஸ்வரியங்களும் குறையாது பெருகும். அதிலும் திருமகளின் மகிமைகளை அறிந்து வழிபட்டால், நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நீக்கமற நிறைந்திருக்கும். வேதங்கள் திருமகளைப் பலவாறு போற்றுகின்றன. ஸ்ரீ சூக்தம் அலைமகளைப் போற்றும் முதன்மையான நூல். சிவமகா புராணத்திலுள்ள காசிக்காண்டத்தில் இடம்பெற்றுள்ள பகுதி லட்சுமி பஞ்சகம். பக்தர்கள பலரும் திருமகள் திருவருளைப் பெறும் வகையில் அவளைப் போற்றி துதித்துள்ளனர். “ஸ்ரீ சூக்தம்” ஓம் ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண ரஜ தஸ்ராஜாம் ” என்று ஆரம்பிக்கும் சூக்தம் இது, வேதங்களிலும், புராணங்களிலும் காணப்படும் மகாலட்சுமியின் பல்வேறு துதிகளின் தொகுப்பே ஆகும். உலக வாழ்க்கைக்கு இன்றியமையாதது செல்வம். அதை வேண்டி பிரார்த்தனை செய்வதாக அமைந்துள்ளது இந்த ஸ்ரீ சூக்தம். இதனை தொடர்ந்து வீட்டில் பாராயணம் செய்வதன் மூலம் அளப்பரிய செல்வ வளமும் மகாலட்சுமியின் கடாட்சமும் நீக்கமற நிலைத்திருக்கும்.

இந்த சூக்தத்தின் விளக்கம்..
எல்லாவற்றையும் அறியும் அக்னி தேவனே! பரமனே! பொன்னின் நிறம் கொண்டவளும், பாவங்களை போக்குபவளும், தங்க ஆபரணங்களை அணிந்தவளும்
லட்சுமி என அழைக்கும் திருமகளை என்னிடம் எழுந்தருள செய்வாய்.

அஷ்ட ஐஸ்வர்யங்களும் தரும் திருமகளை என்னிடமிருந்து எப்பவும் விலகாதிருக்க செய்ய வேண்டுகிறேன். மகிழ்ச்சி நிறைந்தவளே, தாமரை மலரில் வீற்றிருப்பவளே இங்கு வந்து வாசம் செய்திட வேண்டுகிறேன். செல்வத்தின் தலைவன் குபேரனும், புகழின் தேவனும் என்னிடம் வர அருள் புரிவாய். எனது இல்லத்தில் அனைத்துவிதமான ஏழ்மைகளையும், வறுமைகளையும் அகற்றி சுபிக்ஷம் தருவாயாக..!

நறுமணத்தின் இருப்பிடமே, எவராலும் வெல்ல முடியாதவளே மகா லட்சுமியே சகல ஐஸ்வர்யங்களும் எனக்கு அருள வேண்டுகிறேன்.

இந்த சூக்தத்தை தினமும் பாராயணம் செய்துவந்தால் மகா லட்சுமியின் பரிபூர்ண கடாக்ஷம் கிடைக்கும். வீட்டில், சர்வ ஐஸ்வர்யங்களும் வந்து சேரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

லோகா சமஸ்தா சுகினோ பவந்து.