×

“ஜனவரி 11 ஆம் தேதி இலங்கை தூதரகம் முற்றுகை” : வைகோ

முள்ளியவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அழிக்கப்பட்டது.தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதால், யாழ்ப்பாணத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற விடுதலைப் புலிகள் -ராணுவத்திற்கு இடையேயான போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இனப்படுகொலை நடந்தது. இதன் நினைவாக 2019ஆம் ஆண்டு முள்ளிவாய்கால் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.தற்போது இலங்கை அரசின் உத்தரவின் படி
 

முள்ளியவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அழிக்கப்பட்டது.தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதால், யாழ்ப்பாணத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற விடுதலைப் புலிகள் -ராணுவத்திற்கு இடையேயான போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இனப்படுகொலை நடந்தது. இதன் நினைவாக 2019ஆம் ஆண்டு முள்ளிவாய்கால் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.தற்போது இலங்கை அரசின் உத்தரவின் படி நினைவு சின்னம் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் தேசியக் கட்சியினர், மாணவர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை வைகோ தலைமையில் மதிமுகவினர் முற்றுகையிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளியவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் படுகொலையின் அடையாளங்கள் கூட இருக்கக் கூடாது என்பதற்காக நினைவு முற்றத்தை சிங்கள அரசு இடித்துள்ளது என்றும் அவர் அறிவித்துள்ளார்.