×

“பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு” – அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிக் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு தற்போது வரையிலும் ஆன்லைன் வாயிலாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், பிற ஆண்டு மாணவர்களுக்கும் ஆன்லைன் வாயிலாக பாடங்கள் எடுக்கப்படுகிறது. அதோடு, செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தக்கூடிய சூழலே தற்போது நீடிக்கிறது. இதனிடையே, இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டதை போல பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு கடும்
 

கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிக் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு தற்போது வரையிலும் ஆன்லைன் வாயிலாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், பிற ஆண்டு மாணவர்களுக்கும் ஆன்லைன் வாயிலாக பாடங்கள் எடுக்கப்படுகிறது. அதோடு, செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தக்கூடிய சூழலே தற்போது நீடிக்கிறது.

இதனிடையே, இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டதை போல பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் அந்த முடிவு பாதியிலேயே கைவிடப்பட்டது. பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பது பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களை பாதிக்கும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.

இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், சிறப்பு வகுப்புக்கு முதல்வர் ஒப்புதல் அளித்தவுடன் அட்டவணை வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.