×

சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்… இவர்களுக்காக மட்டும்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது. முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய பணிகள் தவிர வேறு எதற்கும் அனுமதி இல்லை என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கும் தடை விதித்த அரசு விமான நிலையம் மற்றும் வெளியூர் செல்லும் ரயில் நிலையம் செல்லும் பயணிகளுக்கு ஏதுவாக சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்க
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது. முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய பணிகள் தவிர வேறு எதற்கும் அனுமதி இல்லை என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கும் தடை விதித்த அரசு விமான நிலையம் மற்றும் வெளியூர் செல்லும் ரயில் நிலையம் செல்லும் பயணிகளுக்கு ஏதுவாக சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. அதன் படி நாளை காலை 7 மணி முதல் 9 மணி வரை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்காக நாளை 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கின் போதும் தூய்மைப் பணியாளர்களுக்காக பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் 100 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் உரிய அடையாள அட்டையுடன் முகக்கவசம் அணிந்து பயணிக்க தூய்மை பணியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.