×

“இந்த எல்லா திட்டத்தையும் உடனடியாக முடிக்க சொல்லிட்டேன்” அதிரடி காட்டும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

விரைவில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதையடுத்து அனைத்து கட்சி நிர்வாகிகளும் அவரவர்கள் தங்கள் சொந்த தொகுதிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளைக் கட்சி சார்பாக முன்னெடுத்துச் செய்து வருகின்றனர். முன்னதாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் நீர்நிலைகளைப் புனரமைத்து பருவமழையை வீணாகாமல் சேகரிக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் & ஊராட்சி பகுதிகளில் #SmartCity திட்டம், #AMRUT திட்டம், பிரதம
 

விரைவில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதையடுத்து அனைத்து கட்சி நிர்வாகிகளும் அவரவர்கள் தங்கள் சொந்த தொகுதிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளைக் கட்சி சார்பாக முன்னெடுத்துச் செய்து வருகின்றனர்.

முன்னதாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் நீர்நிலைகளைப் புனரமைத்து பருவமழையை வீணாகாமல் சேகரிக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் & ஊராட்சி பகுதிகளில் #SmartCity திட்டம், #AMRUT திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம், நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டம், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம், ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட வங்கி கடன் இணைப்பு, அம்மா இருசக்கர வாகன திட்டம் போன்ற அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.