×

செல்வமழை கொட்ட ஸ்ரீ சொர்ண பைரவர் வழிபாடு!

செல்வத்திற்கே அதிபதியான குபேரர் மற்றும் மகாலட்சுமி போன்றவர்களுக்கே பொன் கொடுக்கும் தலைமைக் கடவுளாக ஸ்ரீ சொர்ண பைரவர் கூறப்படுகின்றார். இந்த திருக்கோலத்தில் இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு. ஸ்ரீசொர்ண பைரவரை ஒவ்வொரு வீட்டின் பூஜை அறையிலும் ஒவ்வொரு
 

செல்வத்திற்கே அதிபதியான குபேரர் மற்றும் மகாலட்சுமி போன்றவர்களுக்கே பொன் கொடுக்கும் தலைமைக் கடவுளாக ஸ்ரீ சொர்ண பைரவர் கூறப்படுகின்றார். இந்த திருக்கோலத்தில் இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு. ஸ்ரீசொர்ண பைரவரை ஒவ்வொரு வீட்டின் பூஜை அறையிலும் ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும் ஒவ்வொரு வியாபரத் தலங்களின் கல்லாப்பெட்டி அருகிலும், ஆபரணக் கடைகளிலும் இந்த சொர்ண பைரவரின் திருவுருவப் படத்தை வைத்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீ சொர்ண பைரவரின் படம் அல்லது பொற்காசு அல்லது டாலர் போன்றவற்றை வடக்குத் திசை நோக்கி வைத்து வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும். இப்படத்திற்கு நல்ல மணமுள்ள வண்ண மலர்களை மாலையாக அணிவித்து தாம்பூலம், பழம், தேங்காயுடன் மூன்று வேளையும் பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஸ்ரீ சொர்ண பைரவருக்கு அவல் பாயாசம் விருப்பமான நைவேத்தியமாகக் கூறப்படுகிறது.


மிகவும் எளிமையான இந்த நைவேத்தியத்திற்கு மனமிரங்கி தன்னை வழிபடும் அன்பர்களின் இல்லங்களில் செல்வ மழையைப் பொழியச் செய்வார். இந்த சொர்ண பைரவரின் படத்தை டாலரையோ சட்டைப்பை மற்றும் கைப்பை பர்சுகளில் வைத்தால் பணத்தட்டுப்பாடு வராது என்று கூறப்படுகிறது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சொர்ண பைரவர் படத்தினை எத்தகைய அலங்காரங்களுக்கும் பயன்படுத்தக்கூடாது. கார், மோட்டார் சைக்கிள், வீட்டு வாசற்படி, வரவேற்பறை போன்ற பலரின் நடமாட்டம் உள்ள இடங்களில் வைக்கக்கூடாது. புனிதமான பூஜை அறையில் அல்லது பூஜை செய்யப்படும் இடத்தில் மட்டுமே வைத்து வணங்க வேண்டும்.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தப் படத்தில் அணிவிக்கப்படும் பூமாலை அல்லது பூக்களை வாடி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாடிய பூக்களையோ பிளாஸ்டிக் காகிதப் பூக்களையோ எந்தக் காரணத்தைக் கொண்டும் அணிவிக்கக் கூடாது.

ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரமான 4.30 மணி முதல் 7.00மணி வரை , 11நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ரூத்ராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாமம் செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடும். வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்கங்களும், தன லாபமும் வியாபார முன்னேற்றம், பணி செய்யும் இடத்தில் உள்ள பிரச்னைகள் நீங்கி மனதில் மகிழ்ச்சியை பெறலாம். சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம்செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம்கிட்டும் என்பது ஐதீகம்.

-வித்யா ராஜா