×

தோஷங்களை போக்கும் பிரதோஷத்தில் சோமசூக்த பிரதட்சணம்!

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் சிவப்பெருமான். இவ்வாறு உலகை காத்த உத்தமனான பரமனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷம் என்றாலே ‘பகலின் முடிவு, இரவின் ஆரம்பம்’ என்பது பொருள். முறையான பிரதோஷம் என்பது, குரியன் மறைவதற்கு முன் உள்ள 3 3/4 நாழிகையாகும். சூரியன மறைந்த பின் உள்ள ஒன்றேகால் நாழிகை இவைகளின் கூட்டே உத்தம பிரதோஷ காலமாகும். அதாவது மாலை 4 ½
 

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் சிவப்பெருமான். இவ்வாறு உலகை காத்த உத்தமனான பரமனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம்.

பிரதோஷம் என்றாலே ‘பகலின் முடிவு, இரவின் ஆரம்பம்’ என்பது பொருள். முறையான பிரதோஷம் என்பது, குரியன் மறைவதற்கு முன் உள்ள 3 3/4 நாழிகையாகும். சூரியன மறைந்த பின் உள்ள ஒன்றேகால் நாழிகை இவைகளின் கூட்டே உத்தம பிரதோஷ காலமாகும். அதாவது மாலை 4 ½ மணிக்கு மேல் 6 ½ மனிக்குள் இடைப்பட்ட நேரம் உத்தம பிரதோஷ காலமாகும். 6 ½ மணிக்குமேல் பிரதோஷ வழிபாடு செய்வது, ‘அசுரப்பிரதோஷம்’ எனப்படும். அதனால் வரும் பலன் தீய சக்திகளுக்குப் போய்ச்சேர்கிறது. ஆகவே, உத்தம பிரதோஷ வேளையில் நந்தி தேவரையும், மகாசிவனையும் பிரதோஷ தினமான (அக்.28) இன்று தரிசனம் செய்து வழிபட்டால், கடன், வறுமை, நோய், பயம், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும். நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி, பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்ய வேண்டும்.


ஆலகால விஷம் தேவர்களை முன்னும் பின்னும், வலமும் இடமுமாகத் துரத்தியது. தேவர்கள் அஞ்சி நடுங்கி ஒடுங்கி கயிலை மலைக்கு ஓடினார்கள். இறைவனை வலமாக வந்து உள்ளே சென்று பரமனைச் சரணடையலாம் என்று எண்ணிய அவர்களை ஆலகால விஷம் அப்பிரதட்சணமாகச் சென்று எதிர்த்தது. இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள் வந்த வழியே திரும்பினர்.
ஆலகால விஷம் அந்த பக்கத்திலும் எதிர்த்துச் சென்று பயமுறுத்தியது. இவ்வாறு தேவர்கள் வலமும் இடமுமாய் வந்த அந்த நிகழ்ச்சிதான் சோமசூக்தப் பிரதட்சணம் எனப் பெயர் பெற்றது. சோமசூத்ர பிரதட்சணம்

“வருஷம் சண்டம் வருஷம் சைவ சோமசூத்ரம் புனர் விருஷம்
சண்டஞ்ச சோமசூத்ரஞ்ச புனச்சண்டம் புனர்வருஷம்”

முதலில் நந்நிகேஸ்வரரை வணங்க வேண்டும். நந்தியிடமிருந்து இடமாக(ஆண்டி க்ளாக் வைஸ்) சென்று சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். அங்கிருந்து வலமாக(க்ளாக் வைஸ்) நந்தியிடம் வந்து அவரை
வணங்க வேண்டும். பிறகு நந்தியிடமிருந்து வலமாக சோமசூத்ரம்(சுவாமியின் அபிஷேக ஜலம் வெளியேறும் இடம்) சென்று வணங்கவும். சோமசூத்ரத்திலிருந்து இடமாக திரும்பி நந்தியிடம் வந்து வணங்கவும். நந்தியிடமிருந்து இடமாக சண்டிகேஸரைவணங்கி அங்கிருந்து வலமாக சோமசூத்ரம் சென்று வணங்கி அங்கிருந்து இடமாக சண்டிகேஸரிடம் வந்து தரிசிக்கவும். சண்டேசரிடமிருந்து வலமாக நந்தியிடம் வந்து அவரை வணங்கவும் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் சிவப்பெருமானை தரிசிக்க வேண்டும். இவ்வாறு மூன்று, ஐந்து,

பதினொன்று என ப்ரதக்ஷிணம் செய்தால் எண்ணிய காரியம், நிறைவேறும். ஒரு முறைசெய்தால் ஆயிரம் மடங்குபலன் கிட்டும். ஓம் நமசிவாய!

வித்யா ராஜா