×

போலி இபாஸ்… நான்கு மாநிலம் தாண்டி வந்த பஸ் கோவையில் பறிமுதல்

ராஜஸ்தானில் இருந்து போலி இபாஸ் காண்பித்துப் பல மாநிலங்களைக் கடந்து தமிழகம் வந்த பஸ்ஸை போலீசார் பறிமுதல் செய்தனர். ஊரடங்கு காரணமாக தொழில்கள் முடங்கியுள்ளன. வாழ வழி தெரியாத புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதியுற்ற வருகின்றனர். அவர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் தேவையறிந்து அவை இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பலரும் வாடகைக்கு பஸ் பிடித்து சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். அப்படி வருபவர்களுக்கு இபாஸ் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. இதனால்,
 

ராஜஸ்தானில் இருந்து போலி இபாஸ் காண்பித்துப் பல மாநிலங்களைக் கடந்து தமிழகம் வந்த பஸ்ஸை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஊரடங்கு காரணமாக தொழில்கள் முடங்கியுள்ளன. வாழ வழி தெரியாத புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதியுற்ற வருகின்றனர். அவர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் தேவையறிந்து அவை இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பலரும் வாடகைக்கு பஸ் பிடித்து சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். அப்படி வருபவர்களுக்கு இபாஸ் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. இதனால், போலியாக இபாஸ் தயாரித்து வந்து சிக்குபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இன்று காலை கோவை கருமத்தம்பட்டியில் போலீசார் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வெளிமாநில பதிவு கொண்ட பஸ் ஒன்று வருவதைக் கண்டு நிறுத்தியுள்ளனர்.

அவர்கள் ராஜஸ்தானில் இருந்து நான்கு மாநிலங்களைக் கடந்து தமிழகத்துக்கு வந்திருப்பது தெரிந்தது. இபாஸ் உள்ளதா என்று கேட்ட போது பஸ்ஸில் ஒட்டியிருந்த இபாஸை காட்டியுள்ளனர். சந்தேகத்துடன் அந்த இபாஸை போலீசார் ஸ்கேன் செய்து பார்த்தபோது அது போலியானது என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த பஸ்ஸை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராஜஸ்தானில் இருந்து வந்தவர்களைத் தனிமைப்படுத்திக் கண்காணித்து வருகின்றனர். அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. போலி இபாஸ் தயாரித்தது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.