×

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு… பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம்!

கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமெடுத்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தமிழக தெரிவித்துள்ளது. இதனால் இரவு நேர ஊரடங்கின் போது தனியார், பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்
 

கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமெடுத்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தமிழக தெரிவித்துள்ளது. இதனால் இரவு நேர ஊரடங்கின் போது தனியார், பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12,616 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 37ஆயிரத்து 711ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில், 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்ககோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார் . அதில், செங்கல்பட்டில் செயல்படாமல் உள்ள நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ள முதல்வர் பழனிசாமி , 2 லட்சம் தடுப்பூசி போட திட்டம் உள்ளதால் 10 நாட்களுக்கு தேவையான தடுப்பூசியை அனுப்புங்கள் என்றும் ரெம்டெசிவர் மருந்துகள் தமிழகத்திற்கு தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.