×

இனி அபராதம்லாம் கிடையாது! இதுதான் தண்டனை! கடுப்பான தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருவதால் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க தமிழக அரசு திட்டமிட்டுவருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இதனால் கடைகள் திறக்கப்படும் நேரம் குறைப்பு, சனி, ஞாயிறுகளில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் கொரோனா விதிகளை பின்பற்றாத உணவகங்கள் மற்றும் கடைகளை பூட்டி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுவரை அபராதம் மட்டுமே விதித்து வந்த மாநகராட்சி நுங்கம்பாக்கத்தில்
 

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருவதால் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க தமிழக அரசு திட்டமிட்டுவருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இதனால் கடைகள் திறக்கப்படும் நேரம் குறைப்பு, சனி, ஞாயிறுகளில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா விதிகளை பின்பற்றாத உணவகங்கள் மற்றும் கடைகளை பூட்டி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுவரை அபராதம் மட்டுமே விதித்து வந்த மாநகராட்சி நுங்கம்பாக்கத்தில் உள்ள கடைகளை பூட்டியுள்ளது. முகக்கவசம் அணியாமல் கடைக்கு வருவோருக்கு பொருட்களை வழங்கியதாகவும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வாடிக்கையாளர்களுக்கு அந்த கடை அறிவுறுத்தவில்லை எனக்கூறி அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்