×

ஊடகத்திற்கு தெரியாமல் வாரி வழங்கிய “சாந்தி சமூக சேவை” அறங்காவலர் சுப்பிரமணியம் காலமானார்!

கோவை சாந்தி சமூக சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் சுப்பிரமணியம் காலமானார். அவருக்கு வயது 78. கோவை சாந்தி சமூக சேவை அறக்கட்டளை கோவை வாசிகளுக்கு பரிட்சயமான ஒன்று. ரூ.5-இல் இருந்து, ரூ.15-க்கு டிபன் வகைகள், ரூ.25-க்கு தரமான முழு சாப்பாடு, டீ, பில்டர் காபி, ராகி பால், சத்து மாவு பால் என அனைத்தும் ரூ.5 க்கு விற்பனை செய்து வந்தார் சாந்தி சமூக சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் சுப்பிரமணியம் . கோவையில் சாந்தி கியர்ஸ், சாந்தி
 

கோவை சாந்தி சமூக சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் சுப்பிரமணியம் காலமானார். அவருக்கு வயது 78.

கோவை சாந்தி சமூக சேவை அறக்கட்டளை கோவை வாசிகளுக்கு பரிட்சயமான ஒன்று. ரூ.5-இல் இருந்து, ரூ.15-க்கு டிபன் வகைகள், ரூ.25-க்கு தரமான முழு சாப்பாடு, டீ, பில்டர் காபி, ராகி பால், சத்து மாவு பால் என அனைத்தும் ரூ.5 க்கு விற்பனை செய்து வந்தார் சாந்தி சமூக சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் சுப்பிரமணியம் . கோவையில் சாந்தி கியர்ஸ், சாந்தி உணவகம், சாந்தி மருத்துவமனை, சாந்தி மருந்தகம் என மக்களுக்கு தேவையான அனைத்தையும் லாபம் இல்லாமல் கொடுத்து வந்த பெருமை சுப்பிரமணியத்தையே சாரும்.

தினமும் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவசமாக உணவு கொடுத்து வந்த இவரது மருத்துவமனையிலும், மருந்தகத்திலும் விலை குறைவு என்பது வழக்கமான ஒன்று. சாந்தி சமூக சேவை அமைப்பால் இலவச மின்மயானமும் இயங்கி வருகிறது. இதை எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்த வந்த பண்புக்கும் சொந்தக்காரர் சுப்பிரமணியம் தான்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியம் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு கோவை மக்கள் மத்தியில் மீளா துயரை ஏற்படுத்தியுள்ளது.