×

கொரோனாவை தூசி போல ஊதி தள்ளி விடலாம்- அமைச்சர் செல்லூர் ராஜூ

கொரோனாவிலிருந்து மீண்டுவந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு மதுரையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் உள்ள 32,982 நியாய விலைக்கடைகள் மற்றும் 1,450 அமுதம் அங்காடிகளில் பொது மக்களுக்கு தரமான முககவசங்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வழங்கப்படும். இந்த முககவசங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவில் இருந்து மீண்ட நான் பிளாஸ்மா தானம் செய்ய தயாராக உள்ளேன் , என் வயது 50 யை தாண்டியதால் பிளாஸ்மா தானம் செய்ய முடியவில்லை.
 

கொரோனாவிலிருந்து மீண்டுவந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு மதுரையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் உள்ள 32,982 நியாய விலைக்கடைகள் மற்றும் 1,450 அமுதம் அங்காடிகளில் பொது மக்களுக்கு தரமான முககவசங்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வழங்கப்படும். இந்த முககவசங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவில் இருந்து மீண்ட நான் பிளாஸ்மா தானம் செய்ய தயாராக உள்ளேன் , என் வயது 50 யை தாண்டியதால் பிளாஸ்மா தானம் செய்ய முடியவில்லை. என் உயிரை பற்றி நான் என்றுமே கவலைப்பட்டது இல்லை. கொரோனாவை தூசி போல ஊதி தள்ளி விடலாம்.

கொரைனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன் வர வேண்டும். கொரோனாவில் பாதிக்கப்பட்டு இறுதி கட்டத்தில் மருத்துவமனை செல்வதால் இறப்பு ஏற்படுகிறது. கொரோனாவில் மட்டுமே யாரும் இறக்கவில்லை, இணை நோய்களால் இறப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை. மக்கள் மத்தியில் பிளவை உண்டாக்கவே கடவுள்கள் குறித்த சர்ச்சைகளை எழுப்பி வருகின்றனர்” எனக் கூறினார்.