×

“வாய்ப்பில்ல ராஜா” – ரஜினியை மிஞ்சும் சீமானின் ‘பஞ்ச் டயலாக்’

இர.சுபாஸ் சந்திர போஸ் சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி ‘பஞ்ச் டயலாக் ‘ வசனங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்கள் தமிழகத்து இளைஞர்கள்.’வஞ்சிக் கோட்டை வாலிபன்’படத்தில் ‘சபாஷ் சரியான போட்டி’ என்ற கே.எஸ்.வீரப்பா வசனமும், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் “எம் குலப் பெண்களுக்கு நீ என்ன மஞ்சள் அரைத்துக் கொடுத்தயா?” என்ற சிவாஜி கணேசனின் வசனமும் அந்தக் காலத்திலேயே பிரசித்தம். அந்த வகையில் சமீப காலங்களாக ரஜினிகாந்தின் சினிமா வசனங்கள் தமிழ் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து
 

இர.சுபாஸ் சந்திர போஸ்

சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி ‘பஞ்ச் டயலாக் ‘ வசனங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்கள் தமிழகத்து இளைஞர்கள்.
’வஞ்சிக் கோட்டை வாலிபன்’படத்தில் ‘சபாஷ் சரியான போட்டி’ என்ற கே.எஸ்.வீரப்பா வசனமும், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் “எம் குலப் பெண்களுக்கு நீ என்ன மஞ்சள் அரைத்துக் கொடுத்தயா?” என்ற சிவாஜி கணேசனின் வசனமும் அந்தக் காலத்திலேயே பிரசித்தம்.


அந்த வகையில் சமீப காலங்களாக ரஜினிகாந்தின் சினிமா வசனங்கள் தமிழ் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வந்தன.
“நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி..”. “சும்மா அதிருதுல்லா” என்பது போன்ற ஏராளமான வசனங்களை ரசிகர்கள் தங்களுக்கு மத்தியிலான பேச்சு வழக்கில் உபயோகித்து வந்தனர்.
சமீப காலமாக இத்தகைய ‘பஞ்ச் டயலாக்’கிற்கு பஞ்சம் ஏற்பட்டு வந்த நிலையில், ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைவர் சீமானின் ‘டயலாக்’ ஒன்று தமிழக இளைஞர்கள் மத்தியில் வெகு வேகமாக பரவி வருகிறது.. “வாய்ப்பில்ல ராஜா” என்பதுதான் அந்த ‘டயலா’க். பொதுவாகவே சீமான் தனது பேச்சில் இந்த வார்த்தையை பரவலாக உபயோகித்து வருகிறார்.
இணைய தளத்தில், அதிகம் கேட்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சுகளில், தமிழகத்தில், சீமான்தான் முன்னணியில் இருக்கிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அவரது பேச்சை மட்டும் சுமார் 50 லட்சம் பேர் 3 கோடி முறை பார்த்துள்ளனர். இதே போல் அவரது பேச்சின் முக்கிய வசனங்களை எடுத்து இணைய தளத்தில் அவற்றை பேசி நடித்துக் காட்டும் இளைஞர்களும் பெருகி வருகிறார்கள்.
இதில் இளம் பெண்களும் பங்கேற்று நடித்து பேசுவது தமிழகத்தை பொறுத்தவரை ஆச்சர்யமான விஷயமாக இருக்கிறது. இணைய தளப் பார்வையாளர்களிடம் இதற்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக “சீமான் போல் பேசிக் கலக்கும் பெண்கள்” என்ற வீடியோவை சுமார் 14 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.


இந்த நிலையில் சீமானின் “வாய்ப்பில்ல ராஜா”வை தமிழகத்து இளைஞர்கள் மட்டுமல்ல.. முக்கிய பிரமுகர்களும் கூட தங்களது பேச்சில் “வாய்ப்பில்ல ராஜா” என சீமான் ஸ்டைலில் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்ற கவுண்ட மணியின் டயலாக் மாதிரி இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. என்றாலும், இணையதளம் மூலம் சீமான் இளைஞர்கள் மத்தியில் வைரலாகப் பரவி வருவது அரசியல் ரீதியில் அவருக்கு ஆதாயம் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.