×

“ஆளுநர் இருக்கை இரக்கமற்ற இதயம் கொண்டவர்களின் இருக்கை” : சீமான் விமர்சனம்!

தமிழக அரசு நினைத்தால் 7 பேரை விடுதலை செய்யலாம் என சீமான் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து அதற்கான கோப்பினை தமிழக ஆளுநரிடம் சேர்த்தது. ஆளுநரின் முடிவை அடுத்து 7 பேர் விடுதலை குறித்து முடிவு செய்யப்படும். இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று எந்த
 

தமிழக அரசு நினைத்தால் 7 பேரை விடுதலை செய்யலாம் என சீமான் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து அதற்கான கோப்பினை தமிழக ஆளுநரிடம் சேர்த்தது.

ஆளுநரின் முடிவை அடுத்து 7 பேர் விடுதலை குறித்து முடிவு செய்யப்படும். இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லாததால் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் 7 பேர் விடுதலைக்காக தற்கொலை செய்து கொண்ட செங்கொடியின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,
“7 தமிழர் விடுதலையை சாத்தியப்படுத்துவதே செங்கொடியின் கனவாக இருந்தது.ஒரு தலைமுறை காலம் கடந்துவிட்ட போதும் அவர்கள் விடுதலை ஆகாததுதான் பெரும்துயர். ஆளுநர் இருக்கை என்பது இரக்கமற்ற இதயம் கொண்டவர்களின் இருக்கை. தமிழக அரசு நினைத்தால் 7 பேரை விடுதலை செய்யலாம் . ஆனால் அது ஆளுநர் மீது பழி போடுவது அவசியமற்றது” என்றார்.