×

அலங்காநல்லூர் போலீசுக்கு வந்த ரகசிய தகவல்! பதுக்கி வைக்கப்பட்ட 150 கிலோ குட்கா பறிமுதல்!

அலங்காநல்லூரில் குடோனில் பதுக்கி ரூ.3 லட்சம் மதிப்பிலான 150 கிலோ குட்கா பொருட்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து, இருவரை கைது கைது செய்தனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பாலமேடு செல்லும் சாலையில் சண்முகநாதன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்கள், கணேஷ் புகையிலை போன்ற பொருட்கள் சுமார் 150 கிலோ பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அலங்காநல்லூர் போலீசார்
 

அலங்காநல்லூரில் குடோனில் பதுக்கி ரூ.3 லட்சம் மதிப்பிலான 150 கிலோ குட்கா பொருட்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து, இருவரை கைது கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பாலமேடு செல்லும் சாலையில் சண்முகநாதன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்கள், கணேஷ் புகையிலை போன்ற பொருட்கள் சுமார் 150 கிலோ பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அலங்காநல்லூர் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

உடனடியாக கடை உரிமையாளர் சண்முகநாதன் மற்றும் அவரது சகோதரரான முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் 3 லட்சம் மதிப்பிலான 150 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து சண்முகநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.