×

எல்லாத்துக்கும் தளர்வுகள் அறிவிச்சாச்சு! அப்பறம் என்ன செப்.30 வரை ஊரடங்கு?

தமிழகத்தில் நான்காம் கட்டமாக கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில், பேருந்து சேவை, இ பாஸ் ரத்து, வழிபாட்டு தலங்கள் திறப்பு என அனைத்துக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எதற்கெல்லாம் தடை: பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை திரையரங்குகள், நீச்சல்குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியியல் பூங்காக்கள், அருங்காட்சியங்கள், சுற்றுலாத்தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும்
 

தமிழகத்தில் நான்காம் கட்டமாக கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில், பேருந்து சேவை, இ பாஸ் ரத்து, வழிபாட்டு தலங்கள் திறப்பு என அனைத்துக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எதற்கெல்லாம் தடை:

பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை

திரையரங்குகள், நீச்சல்குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியியல் பூங்காக்கள், அருங்காட்சியங்கள், சுற்றுலாத்தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை திறக்க தடை

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கான தடை தொடரும்

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் தவிர மற்ற சர்வதேச விமானபோக்குவரத்துக்கு தடை

மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிறக்கூட்டங்கள், மற்றும் ஊர்வலங்களுக்கு தடை

மாநிலத்திற்குள் பயணியர் ரயில்கள் செயல்பட 15.9.2020 வரை அனுமதியில்லை.

உடற்பயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டு பயிற்சிகளுக்காக, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.