×

’47 மீனவர்கள், 300க்கும் அதிகமான மாணவர்கள்… உடனே மீட்டுக் காப்பாற்றுங்கள்’ வைகோ வேண்டுகோள்

கொரோனா பாதிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் தெரிய தொடங்கியது. அடுத்தடுத்த மாதங்களில் அதன் ஆதிக்கம் மிகுந்திருந்தது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் தொடங்குவதற்கு முன் வெளியூர், வெளிநாடு சென்றவர்கள் நிலை கவலைக்குரியதாக இருக்கிறது. சிலரை மீட்டாலும் பலர் இன்னமும் சிக்கிக்கொண்டு தவிக்கின்றனர். அப்படி பல இடங்களில் தவிப்பவர்களை மீட்கும்படி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மத்திய – மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஈரானில் சிக்கிய மீனவர்களை மீட்க பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தத்தையும் நினைவூட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள
 

கொரோனா பாதிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் தெரிய தொடங்கியது. அடுத்தடுத்த மாதங்களில் அதன் ஆதிக்கம் மிகுந்திருந்தது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் தொடங்குவதற்கு முன் வெளியூர், வெளிநாடு சென்றவர்கள் நிலை கவலைக்குரியதாக இருக்கிறது. சிலரை மீட்டாலும் பலர் இன்னமும் சிக்கிக்கொண்டு தவிக்கின்றனர். அப்படி பல இடங்களில் தவிப்பவர்களை மீட்கும்படி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மத்திய – மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஈரானில் சிக்கிய மீனவர்களை மீட்க பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தத்தையும் நினைவூட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டைச் சேர்ந்த 650 க்கும் மேற்பட்ட மாணவர்கள், கிர்கிஸ்தான் நாட்டில், மருத்துவக் கல்வி பயின்று வருகின்றார்கள். கொரோனா தொற்று காரணமாக, விடுதி அறைகளில் தங்கி இருக்கும்படியும், வெளியில் வர வேண்டாம் எனவும், பல்கலைக்கழங்கள் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளன. எனவே, தொற்று அச்சத்தில் இருக்கின்றனர். இந்தியத் தூதரகத்தில் தொடர்ந்து விண்ணப்பித்தனர். அதன்பேரில், தமிழ்நாட்டுக்கு இரண்டு வான் ஊர்திகள் ஏற்பாடு செய்தார்கள். 324 மாணவர்கள், திருச்சிக்கு வந்து சேர்ந்தனர். எஞ்சியவர்களையும் மீட்டுக்கொண்டு வருவதற்கு, வந்தே பாரத் திட்டத்தின் கீழ், உடனடியாக வான் ஊர்திகளை இயக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதேபோல், ஈரான் நாட்டில் சிக்கி இருந்த 720 மீனவர்களை மீட்டுக்கொண்டு வர வேண்டும் என, நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போதே வலியுறுத்தினேன். அமைச்சரிடம் வலியுறுத்தினேன். தொடர்ந்து அறிக்கைகள் கொடுத்து வந்தேன். அவர்களுள் 673 பேர், கப்பல் மூலமாக தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்து விட்டனர்.
கப்பலில் இடம் இல்லை என்பதால், 47 மீனவர்கள் அங்கேயே விடப்பட்டனர். கப்பலை நம்பி, நிறுவனத்தை விட்டு வெளியே வந்து விட்டனர். எனவே, அவர்களை மீண்டும் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள நிறுவனம் மறுத்து விட்டது. அதனால், உணவுக்கும், தங்கும் இடத்திற்கும் வழி இல்லாமல் திண்டாடிக் கொண்டு இருக்கின்றார்கள். இனி கப்பல் ஏற்பாடு செய்ய வழி இல்லை. எனவே, விமானத்தில் ஊருக்குச் செல்லுங்கள் என்று சொல்கின்றார்கள். விமானக் கட்டணம் செலுத்த அவர்களிடம் பணம் இல்லை. எனவே, அவர்களை மீட்டுக் கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.’ என்று அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.