×

தந்தை,மகன் சிறையில் பலியான விவகாரம்: சாத்தான்குளம் காவலர்கள் கூண்டோடு மாற்றம்!

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் ஊரடங்கில் கடையைத் திறந்து வைத்திருந்ததால் போலீசாரால் தாக்கப்பட்டு, விசாரணைக்காகக் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதால் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். சாதாரண மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்தப்பட்ட இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் இச்சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்கு போட வேண்டும் என்றும் அவர்கள்
 

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் ஊரடங்கில் கடையைத் திறந்து வைத்திருந்ததால் போலீசாரால் தாக்கப்பட்டு, விசாரணைக்காகக் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதால் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். சாதாரண மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்தப்பட்ட இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அதுமட்டுமில்லாமல் இச்சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்கு போட வேண்டும் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களிலும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர், காவலர்கள் உட்பட 27 பேர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக 27 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.