×

‘ஒரே இடத்தில் இருவரும்’ சசிகலா விசிட் ; எடப்பாடி அப்பீட்!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் மதுசூதனனின் உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்திருந்தார் . எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் மதுசூதனனின் உடல்நிலை குறித்து விசாரித்துக் கொண்டிருந்தபோது அங்கு சசிகலா என்ட்ரி கொடுத்ததால் பரபரப்பு நிலவியது. சசிகலா வருகையை அறிந்த எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து வேகமாக
 

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் மதுசூதனனின் உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்திருந்தார் . எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் மதுசூதனனின் உடல்நிலை குறித்து விசாரித்துக் கொண்டிருந்தபோது அங்கு சசிகலா என்ட்ரி கொடுத்ததால் பரபரப்பு நிலவியது.

சசிகலா வருகையை அறிந்த எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து வேகமாக வெளியேற சசிகலா மருத்துவமனைக்குள் என்ட்ரி கொடுத்தார். தனது ஆதரவாளர்களுடன் மிடுக்காக நடந்து சென்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.மதுசூதனனின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த சசிகலா ,அதிமுக மீது அதீத பற்று கொண்டவர் மதுசூதனன். அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க நேரில் வந்து பார்த்தேன். அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

சிறையில் இருந்து வெளியில் வந்த சசிகலா அதிமுகவில் இணைய போராட்டங்கள் நடத்திய நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அவர் அரசியல் என்று ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தார். சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவை கைப்பற்ற நினைத்து அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் தொலைபேசியில் சசிகலா பேசி வருகிறார்.

அதேசமயம் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசி வரும் நிர்வாகிகளை அதிமுக தலைமை அதிரடியாக நீக்கி வருகிறது. இத்தகைய பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா இருவரும் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக சசிகலா அதிமுக கொடி பொருந்திய காரில் மருத்துவமனைக்கு வந்தது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே பெங்களூருவில் இருந்து சென்னைக்கு அதிமுக கொடி பொருந்திய காரில் சசிகலா வந்தபோது அப்போதைய அதிமுக அரசு காரை வழிமறித்து கொடியை அகற்ற முற்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த தனது உரிமை உண்டு என்று திட்டவட்டமாகக் கூறியது கவனிக்கத்தக்கது.