×

தஞ்சையில் சரபோஜி மன்னருக்கு விழா; தேச துரோகிக்கு அரசு விழாவா? என பொதுமக்கள் விமர்சனம்!

மன்னர் சரபோஜியின் 243 பிறந்த நாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது குறித்து பொது மக்கள் விமர்சித்துள்ளனர். தஞ்சையை ஆண்ட கடைசி மன்னரான இரண்டாம் சரபோஜியின் 243 ஆவது பிறந்த நாள் விழா, தஞ்சை அரண்மனையில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர், சரபோஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து, தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் சார்பில் சில நூல்களை அமைச்சர் துரைக்கண்ணு வெளியிட்டார். சர்ச்சைக்குரிய வரலாற்றை கொண்ட சரபோஜி மன்னர் தான்,
 

மன்னர் சரபோஜியின் 243 பிறந்த நாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது குறித்து பொது மக்கள் விமர்சித்துள்ளனர்.

தஞ்சையை ஆண்ட கடைசி மன்னரான இரண்டாம் சரபோஜியின் 243 ஆவது பிறந்த நாள் விழா, தஞ்சை அரண்மனையில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர், சரபோஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து, தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் சார்பில் சில நூல்களை அமைச்சர் துரைக்கண்ணு வெளியிட்டார். சர்ச்சைக்குரிய வரலாற்றை கொண்ட சரபோஜி மன்னர் தான், சரஸ்வதி மஹால் நூலகத்தை தோற்றுவித்ததாக தெரிகிறது. ஆனால் அதனை நாயக்க மன்னர்கள் தான் கட்டினார்கள் என வரலாறு கூறுகிறது.

சர்ச்சைக்குரிய வரலாற்றை இவர் கொண்டிருப்பதாக கூறப்படுவதன் காரணம் என்னவென்றால், தனது நாட்டை ஆங்கிலேயருக்கு விற்ற முதல் மன்னர் இவரே என்றும் வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியை காட்டியதும் இவர் தான் என்றும் மருது சகோதரர்களை பிடித்து ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்க ஆட்களை ஏவி விட்டதும் இவர் தான் என வரலாற்று புத்தகங்கள் தெரிவிக்கின்றன. சரபோஜியின் இந்த வரலாறுகள் சரஸ்வதி மகாலில் இன்றைக்கும் கல்வெட்டாக இருக்கிறதாம்.

இவ்வாறு சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்த்து செயல்பட்ட சரபோஜிக்கு அரசு விழா நடத்தி அதில் அமைச்சர்கள் கலந்து கொள்வது சுதந்திர வீரர்களை அவமதிக்கும் செயல் என்றும் சரபோஜிக்கு விழா எடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும் மக்கள் விமர்சித்துள்ளனர்.