×

கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்தவர் விவேக் – சத்குரு உருக்கம்!

நகைச்சுவை நடிகர் விவேக் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் இன்னும் சற்று நேரத்தில் மேட்டுகுப்பம் பகுதியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. நகைச்சுவை மூலம் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்த விவேக், மரக்கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். இப்படிப்பட்ட மாபெரும் மனிதரின் மறைவு பலரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. விவேக்கின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விவேக் மறைவுக்கு இரங்கல்
 

நகைச்சுவை நடிகர் விவேக் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் இன்னும் சற்று நேரத்தில் மேட்டுகுப்பம் பகுதியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. நகைச்சுவை மூலம் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்த விவேக், மரக்கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். இப்படிப்பட்ட மாபெரும் மனிதரின் மறைவு பலரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. விவேக்கின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “விவேக் – தனது கலையில் ஜாம்பவானாகத் திகழ்ந்து, கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்தவர். தமிழ்நாட்டின் மாபெரும் மரங்கள் நடும் திட்டத்தை துவக்கியதற்கும் என்றும் நம் நினைவில் நிற்பார் – அவர் இதயம் இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் துடித்தது. என் ஆழ்ந்த இரங்கல்கள் & குடும்பத்தினருக்கு ஆசிகள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஈஷா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “நடிகர் #விவேக் – ஒரு மகத்தான நடிகர், மக்கள் நலனுக்கு உழைத்தவர், மரங்கள் நடும் சமூக ஆர்வலர், அற்புதமான மனிதர் – அவர் மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நலனில் மிகுந்த அக்கறைக் கொண்ட நடிகர் விவேக் ஈஷா பசுமை கரங்கள் திட்டத்திற்கு பெரும் ஆதரவு அளித்தார். பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.