×

‘வாக்காளர் சேர்ப்பில் முறைகேடு’ : திமுக எம்.பி ஆர்.எஸ் பாரதி பேட்டி!

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் சேர்ப்பில் முறைகேடு நடந்திருப்பதாக ஆர் எஸ் பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் ஆணையம் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அதில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாதத்தில் 2 நாட்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெற்ற நிலையில், அடுத்த மாதம் 2 நாட்கள் முகாம் நடைபெற உள்ளது.
 

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் சேர்ப்பில் முறைகேடு நடந்திருப்பதாக ஆர் எஸ் பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் ஆணையம் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அதில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாதத்தில் 2 நாட்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெற்ற நிலையில், அடுத்த மாதம் 2 நாட்கள் முகாம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் வாக்காளர் சேர்ப்பில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக திமுக எம்.பி.ஆர் எஸ் பாரதி தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் தொகுதியில் புதிதாக சேர்க்கப்பட்ட 30 ஆயிரம் வாக்காளர்களின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்றும் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் பலருக்கு வயதைக் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி உறுதி அளித்ததாகவும் அவர் கூறினார்.